
ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், “கைமாறு வேண்டா தடபாடு” “மாரி மாசத்து எண்ணாற்றம் கொல்லோ உலகு “ திருவள்ளுவர் சொல்றாரு. வானத்தில் இருந்து மழை பொழுகிறது. அந்த மழைக்கு நீ என்ன கைமாறு செய்ய முடியும்? என்ன உதவி செய்ய முடியும் ? கைமாறே செய்ய முடியாது. அதுபோல தொண்டு செய்பவர்களுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் என்ன பதவி கேக்கிறார்களா ? பணம் கேட்கிறார்களா ? பெருமைகளை திருடுகிறார்களா ? உழைக்கிறார்கள். கட்சி மேலே வரவேண்டும் என்கிறார்கள்.
அப்பறம் அவங்க அவங்க வேலைக்கோ, கூலி வேலைக்கோ போகின்றர்க. நாள்தோறும் என்ன வேலைக்கோ போய் விடுகிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல், கைமாறு கருதாமல் ஒரு இயக்கத்துக்கு தொண்டர்கள் தான் பாடுபடுகிறார்கள். நாமெல்லாம் எம்எல்ஏ ஆகலாம் , எம்பி ஆகலாம், எம்எல்.சி ஆகலாம், மாவட்ட செயலாளர் ஆகலாம், அவர்கள் என்ன ஆகிறார்கள் ? ஒன்னுமே கிடையாது…
எதுக்காக உழைக்கணும்? கைமாறு கருதாமல் உழைக்க கூடியவர்கள் தொண்டர்கள். அதனால்தான் நமக்கு வழிகாட்டியாக இருந்த தலைவர்கள் தொண்டர்களை பெருமை படுத்தினார்கள். அவனுக்கு நாம் என்ன செய்ய முடியும் ? அவன் வந்தா பார்க்கிறோம், கையெடுத்து கும்பிட்டு பாத்துட்டாருன்னா போயிருவான்… புரட்சி தலைவரோட தோட்டத்தில எப்போ பாத்தாலும் தொண்டர்கள் இருப்பாங்க. அவரு அலுவலகத்திற்கு புறப்படுகிற போது எல்லாரையும் பாத்து கும்பிட்டு தான் போவாரு. அவருடைய தாயார் உடைய படத்தையும் பாத்து கும்பிட்டு போவார்.
ஆகவே ,தொண்டர்களை எந்த இயக்கம் பெருமைப்படுத்துகிறதோ, அவர்களை உற்சாகப்படுத்துகிறதோ, ஊக்கப்படுத்துகிறதோ, அவர்கள் மேல் அக்கறை காட்டுகிறதோ, அந்த இயக்கம் வளரும். அதை நன்கு உணர்ந்தவன் தான் நம்முடைய அருமை நண்பர் ஓபிஎஸ் அவர்கள். நாலாம் வந்து கிட்டதட்ட ரொம்ப வருஷமா எங்கேயும் போறதே இல்லை. ஆனாலும் இன்று ஏற்பட்டு இருக்ககூடிய அரசியல் சூழ்நிலைக்காக… நான் எப்படியும் அவர் பக்கம் இருக்கணும். தர்மர் இருக்கிறாரோ… இல்லையோ, தர்மரும் நம்ம கூட இருக்கிறார். தர்மமும் நம்ம கூட இருக்கிறது. ஆகையினாலே தான் நான் இருக்கிறேன் என தெரிவித்தார்.