ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த வீடியோ சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் டெல்லியை சேர்ந்த விபோர் ஆனந்த் என்ற வழக்கறிஞர் உட்பட 5  இணையதள பயனாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சர்ச்சை தொடர்பான வீடியோ சுமார் 9 நொடிகள் ஓடும் வீடியோவாகும். இதில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் சாசனம் எந்த தொழிலாளியும் மது அருந்தக்கூடாது என கூறுகிறது.

ஆனால் அரசியலமைப்பை எழுதும்போது அதை எழுதியவர் குடி போதையில் எழுதி இருக்க வேண்டும் என எங்களில் ஒருவர் கூறினார். இவ்வாறு பேசுவதாக பதிவாகியிருந்தது. இது  குறித்த விசாரணையில் இந்த வீடியோ பழைய வீடியோ ஆகும். இதனை தற்போது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கெஜ்ரிவால் டாக்டர் அம்பேத்கரையோ அல்லது இந்திய அரசியல் அமைப்பையும் பற்றி தவறாக  கூறவில்லை  என்பதும், காங்கிரஸ் கட்சியின் அரசியலமைப்பு பற்றி விவாதித்து இருக்கிறார் என்பதும் விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.