இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்ற நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக நியூசிலாந்து விளையாடி 3-0 எனத் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. மும்பையில் இன்று கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அதில் விக்கட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆனது போட்டியை தலைகீழாக மாற்றியது. இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் அவுட் உறுதியாகாத நிலையில், எப்படி நீங்கள் அவுட் கொடுத்தீர்கள் என்று ஏபிடி வில்லியர்ஸ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரிஷிப் பண்ட் 9 பவுண்டரிகள், 1 சிக்சர் என விளாசி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். அப்போது அஜஸ் பட்டேல் பந்து வீசிய போது பண்ட் அதை டிஃபண்ட் செய்து, பந்தை காலில் வாங்கினார். அப்போது களநடுவர் நாட் அவுட் வழங்கிய நிலையில், நியூசிலாந்து அணி ரிவ்யூ கேட்டு 3-வது அம்பையருக்கு சென்றது. ரிவ்யூவில் பந்து பேட்டை கடக்கும் போது ஸ்னிக் தெரிந்தது. பந்து கடத்துச் செல்லும் அதே நேரத்தில் பண்ட் தன்னுடைய பேட்டை கால் பேடிலும் அடிக்கும் காட்சியும் இடம்பெற்றது. பந்து, பேட், கால்-பேடு மூன்றுமே ஒரே நேரத்தில் உரசுவது போல் இருந்ததால் முடிவு தாமதமானது. அதன் பின்னர் பந்து பேட்டில் பட்டதாக கூறி ரிஷப் பண்ட்டுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, சர்ச்சை! மீண்டும் ஒரு முழுங்கிய பகுதி, ரிஷப் பண்ட் பந்தைய அடித்தாரா இல்லையா?  பந்தை அடித்தது நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லையா? நான் எப்போதும் இதைப்பற்றி கவலைப்படுகிறேன். இது ஒரு பெரிய டெஸ்ட் போட்டியில் நடக்கிறது. ஹாட்ஸ்பாட் எங்கே? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை என்னவென்றால் அந்த அவுட்டில் சந்தேகம் இருந்திருக்க வேண்டும். நீங்கள் 3வது அம்பயர் பந்து பட்டு சென்றதை காணாதவரை, ஆன் ஃபீல்டில் இருந்திருக்க வேண்டும். எனக்கு உறுதியாக தெரியவில்லை, என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு இங்கு எந்த சார்பும் இல்லை. நிலையான அழைப்புகள் மட்டும் தொழில்நுட்பத்தின் நல்ல பயன்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கிறேன் என்று அவர் கூறினார்.