செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் ஏரி,  குளங்கள், அரசின் பொது இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள் அப்படினா….இத்தனை வீடுகள் 250 வீடுகள், 700 வீடுகள் குடியேறுக்கின்ற  வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தாங்க ? எல்லா இணைப்பும் கொடுத்திருக்காங்க… மின் இணைப்பு, எரிவாயு இணைப்பு, குடிநீர் இணைப்பு, சாலை போட்டு இருக்கிறாங்க.

வீட்டு வரி வாங்கி இருக்காங்க, குடும்ப அட்டை கொடுத்து இருக்காங்க, வாக்காளர் உரிமை கொடுத்திருக்காங்க…..  எல்லாம் கொடுத்துட்டு அரை நூற்றாண்டுகள்…. இரண்டு தலைமுறைகளுக்கு மேல வாழ விட்டுட்டு,  திருப்பி இது ஆக்கிரமிப்புன்னு இடுச்சி, எங்களை வீடு அற்றவர்களாக ஆக்கி, தெருவுல நிக்க வைக்கிறது எந்த வகையில் நியாயம் ?

அப்போ குற்றம் செஞ்சது மக்களா ? ஆட்சியாளர்களா ? அன்றைக்கு இருந்த அதிகாரிகள் என்ன பண்ணுங்க ? அன்னைக்கு இருந்த மாவட்ட ஆட்சியர் என்ன பண்ணாரு ? அப்ப அவுங்க எல்லாம் ஏன் இதை கேட்கல ? தடுக்கல ?  முதன்முதலா இவங்க  இதுல வீடு கட்டும்போது…. இது அரசு இடம்,  பொது இடம்… இதை ஆக்கிரமித்து வீடு கட்டாதீங்க….  நீங்க வெளியே போங்கன்னு சொல்லி இருந்தா ? அவுங்க வேற ஒரு இடம்  வாங்கி,  வீடு  கட்டிட்டு போயிருப்பாங்க. அவங்க காசு போட்டு கட்டி…. பல ஆண்டுகள் குடி இருந்த பிறகு இடிச்சு விட்டால்,  எப்படி?  என சீமான் ஆவேசமானார்.