
பீகாரில் உள்ள சமஸ்திபூரில் உள்ள காவல் நிலையத்தில் 6 பெண்கள் குப்பைகளை சேகரிக்க வந்துள்ளனர். அப்பொழுது காவல் நிலையத்திற்குள் ஒரு மேசையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை திருடியுள்ளனர். இதனைப் பார்த்த காவலர் ஒருவர் உடனே அவர்களை துரத்தினார். 6 பேரில் 4 பேர் பிடிபட்டனர். மற்ற இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அதோடு காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, மற்ற 2 பெண்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கூரியாதவது, மொத்தம் 16 லிட்டர் மது பாட்டில்கள் மீட்கப்பட்டதாகவும், தப்பிய ஓடிய மற்ற இருவரையும் விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.