சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், 65 வயதான செல்வம் என்பவர், அவரது மனைவி பூங்கொடியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் கூலித் தொழிலாளர்களாக கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், சாப்பாடு குறித்து ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கான காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது, செல்வம் பரோட்டா வாங்கி வந்து தனது மனைவியிடம் சாப்பிடுமாறு கூறியபோது, பூங்கொடி அதனை மறுத்து, கோபத்துடன் இருந்து வந்தார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், செல்வம் உறக்க மாத்திரை எடுத்துக்கொண்டு உறங்கிய நிலையில், பூங்கொடி அரிவாள்மணையால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்ததும், காவல்துறையினர் செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, பூங்கொடியை கைது செய்து சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.