கடந்த 2008-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தின் மூலம் மித்ரன் ஜவஹர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் மித்ரன் தனுஷ் நடிப்பில் குட்டி, உத்தமபுத்திரன் படங்களை இயக்கினார். இந்நிலையில் மித்ரன் ஜவஹர் இயக்கதில் தனுஷ், நித்தியாமேனன் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த திரிசிற்றம்பலம் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மித்ரன் ஜவஹர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, திருசிற்றம்பலம் படத்திற்கு பிறகு அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் இருக்கிறேன். நான் வேறு எந்த படமும் பண்ணவில்லை. என் பெயரில் வெளியில் இருந்து வரும் போலியான செய்திகளையோ, விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம். விரைவில் அடுத்த படத்திற்கான செய்தியை எனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.