
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 மற்றும் ராம்சரணை வைத்து ஆர்சி15 போன்ற படங்களை இயக்கி வருகிறார். ஆர்சி 15 படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் க்யாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் நிலையில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ராம்சரண் 18 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் தற்போது குதிரை மீது அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனுடன் ஆர்சி 15 படத்தை முடிக்கும் பயணத்தைத் உத்வேகமாக வைத்திருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
A journey that has me back to back in the saddle!
Towards #RC15 pic.twitter.com/spv0c18y9R— Shankar Shanmugham (@shankarshanmugh) March 19, 2023