
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ஆம் தேதி அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறை 26-ஆம் தேதி அன்று தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலகங்கள் அரசு ஈடுபாடு தொடர்புடைய அவசர பணிகளை கவனிக்கும் விதமாக தேவையான பணியாளர்களைக் கொண்டும் இயங்கும் என கூறியுள்ளார்.