
வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் திமுக மீண்டும் ஆட்சியை அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது. அதோடு மீண்டும் வெற்றிபெற வேண்டும் என்று உறுதியாக உள்ளது. இதனால் திமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு அதிரடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பகுதிகளிலும் ஆயிரம் வாக்காளர்களை கவர 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஒருவர் தலைமை தாங்குவார், மற்ற 10 பேர் அவருக்கு கீழ் செயல்படுவார்.
இதுபோன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட சில வீடுகளை கணக்கெடுத்து, அந்த வீடுகளில் வசித்து வரும் மக்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு குழுவினரிடமும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் படி இந்த 11 பேர் கொண்ட குழுக்கள் தீவிரமாக களம் இறங்கி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் திமுக அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இப்படி 2026ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கணக்கை போட்டு, கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறார்கள்.