தொழிலாளர் நலன் கருதி அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகும் (PF). அதாவது தனியார் நிறுவனங்களிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் எதிர்கால நலனுக்காக தொழிலாளர்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களது வருங்கால தேவைக்காக வைக்கப்படும் நிதி ஆகும். இதனை தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேமிப்புத் தொகையை ஊழியர்கள் தங்களுக்கு 55 வயது பூர்த்தியாகும் போது தங்களது pF கணக்கிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் வீடு கட்டுதல், குழந்தைகளின் திருமண செலவு, கல்வி போன்ற காரணங்களுக்காக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UAN மிக முக்கியமானதாகும். இந்த எண்ணை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது PF  கணக்குகளை சரி பார்க்கவும், கண்காணிக்கவும் முடியும்.

ஊழியர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிஎஃப் கணக்குகள் இருக்கும் நிலையில் இந்த எண்ணை பயன்படுத்தி ஒரே இடத்தில் விவரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.  PF கணக்கை சரிபார்க்க செய்ய வேண்டியவை,

1. PF அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in என்ற பக்கத்தில் நுழைய வேண்டும்.
2. அதில் எந்த சேவையை பெற வேண்டுமா அதற்கேற்ற விருப்பத்தினை கிளிக் செய்து UAN அல்லது ஆன்லைன் சேவைக்கு செல்ல வேண்டும்.
3. அதன் பின் ஸ்கிரீனில் தெரியும் Know your UAN என்ற ஸ்டேட்டஸை கிளிக் செய்ய வேண்டும்.
4. அதன் பின் உறுப்பினர் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான் கார்டு எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உள்ளிட வேண்டும்.
5. அதன்பின்பு ஊழியர்கள் தங்களது பெயர் பிறந்த தேதி மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
6. அதன் பின் ஸ்கிரீனில் தோன்றும் கேப்சா கோர்டுகளை சரியாக பதிவு செய்ய வேண்டும்.
7. அதன் பின் get Authorization pin என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
8. மேற்கூறிய அனைத்தையும் சரியாக பதிவு செய்த பின் UAN ஆர்டர் வழங்கப்படும்.