கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் வழங்கப்படும் ஒரு கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டு மூலம் முன்பணம் செலுத்தாமல் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த தொகையை திரும்பி செலுத்தாவிட்டால் அதற்கான வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டும். இந்த கிரெடிட் கார்டுக்கு அப்ளை செய்ய வேண்டும் என்றால் உங்களது வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.

இதற்கு அப்ளை செய்வதற்கு தேவையான ஆவணங்கள் டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் கார்டு மற்றும் வருமான தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வைத்திருக்க வேண்டும். மேலும் இத்தகைய ஆவணங்களையும் கொண்டு சென்று வங்கியில் விண்ணப்பித்து கிரெடிட் கார்டு எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.