வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் எஸ்.பாபு, நர்சிங் பயிற்சி மாணவியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பயிர்சிக்காக வந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் அங்கே பணிபுரியும் அரசு மருத்துவர் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சிங் மாணவி சக மாணவிகளிடம் கூறியுள்ளார். பின் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி மருத்துவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் புகாரின் பேரில், போலீசார் மருத்துவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.

மேலும், மாணவியின் புகாரை தொடர்ந்து, மருத்துவர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.