பலரது வீட்டில் செல்ல பிராணியாக வளர்க்கக்கூடியது நாய். வீட்டில் நாயை வளர்ப்பவர்கள் மீது அளவற்ற பாசத்தோடும், நன்றி விசுவாசத்தோடு இருப்பது மனித உயிரினங்களை காட்டிலும் நாய் தான். வீட்டிற்கு பாதுகாப்பும் அளிக்கக்கூடிய பிராணியாக இது விளங்குகிறது. அதோடு காவல்துறையினருக்கும் நாய்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றது.

மேலும் மனிதரிடம் இருக்கும் மோப்ப சக்தியை விட நாய்களின் மோப்ப சக்தி கிட்டத்தட்ட 10000 முதல் 100000 மடங்கு அதிகமானதாகும். ஆகவே காவல்துறையினருக்கு உதவுவதில் முதல் பங்கு வகிக்கின்றது. மனிதர்களின் உணர்வுகளை கூட நாய்கள் அவைகளின் மோப்ப சக்தியின் மூலம் அறிந்துவிடும். நாய் குட்டி 18 முதல் 20 மணி நேரங்கள் வரை ஒரு நாளைக்கு தூக்கத்திற்காக நேரத்தினை ஒதுக்கும். அந்த வகையில் சீனாவை சேர்ந்த பிரபல காவல் நாய் ஃபௌசாய் என்ற நாய் பணியின் போது தூங்கியுள்ளது.

மேலும் தனது சாப்பாடு கிண்ணத்தில் சிறுநீரும் கழித்துள்ளது. ஆகவே அதன் வருடாந்திர ஊக்கத்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023ல் பிறந்த இந்த நாய்க்குட்டி சிரிப்பின் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமானது. இதன் அசாத்திய திறமையை கண்ட போலீசார் இதனை காவல்நிலையாக தத்தெடுத்து வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.