
இன்றைய காலகட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் மற்றும் வயதானவர்கள் போன்றவர்களுக்காக வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும்படி ஒரு சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் என்னும் வங்கியினால் வழங்கப்படும் இந்த சேவையில் சேவை கட்டணம் எதுவும் கிடையாது.
தற்போது ஆதார் ஏடிஎம்கள் வழியாக பயோமெட்ரிக் அடையாளத்தை பயன்படுத்தி அனைவரும் எளிதாக பணம் எடுக்க முடியும். இதற்கு தனது ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் பணம் எடுப்பது மட்டுமன்றி பிற பணிகளையும் எளிதாக செய்யம் வசதி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆதார் ஏடிஎம் வைத்து எளிதாக பணம் எடுக்கலாம். அதற்கான வழி முறைகளை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அதாவது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் சிறந்த சேவை என்னவென்றால், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு கொடுப்பதாகும். அதோடு ஆன்லைன் அடிப்படையிலும் ஏடிஎம் வசதியை இந்த வங்கி தொடங்கியுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் அதனை ஆதாரை இணைத்து வைத்தால் வீட்டில் இருந்து பணத்தை எளிதாக பெற முடியும்.
அவர்கள் வங்கிக்கோ அல்லது அருகில் உள்ள ஏடிஎம் மையத்திற்கோ செல்ல வேண்டிய நிலை இல்லை. இதைத் தொடர்ந்து இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி இணையதளத்தில் வீட்டிலிருந்தே பணத்தை பெற முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு தபால்காரர் மைக்ரோ ஏடிஎம் மூலம் வீட்டிற்கு நேரில் வருவார். அவரிடம் வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் அடையாளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அத்துடன் அடையாளம் சரிபார்க்கப்பட்டவுடன் வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து தொகை கழிக்கப்படும். அதன் பின் தபால்காரர் பணம் செலுத்துவார்.
இந்த சேவையில் ஒரு முறை பரிவர்த்தனை செய்வதற்கு அதிகபட்ச தொகை ரூ.10,000 ஆகும். தவறான ஆதார் விவரங்கள் அல்லது தவறான வங்கி விவரங்கள் கொடுக்கப்பட்டாலோ பரிவர்த்தனை என்பது நிராகரிக்கப்படும். இந்த சிறந்த சேவையான டோர் ஸ்டெப் ஆதார் ஏடிஎம் சேவையின் மூலம் பணத்தை பெறுவதற்கு முதலில் http://ipponline.com மற்றும் டோர் ஸ்டெப் பேங்கிங் விருப்பத்தை இணையதளத்தில் தேர்வு செய்யவும்.
அதில் பெயர், மொபைல் போன், முகவரி, பின்குறியீடு மின்னஞ்சல் ஐடி போன்ற விவரங்களையும், பணம் எடுக்கப்படும் வங்கிக் கணக்கின் பெயரையும் உள்ளிட வேண்டும் அதன் பிறகு I agree என்ற ஆப்ஷனை கிளிக் செய்து சமர்ப்பிக்கவும்.
அதன்பின், தபால் நிலையத்தின் தபால்காரர் பயோமெட்ரிக் முறையுடன் உங்களை வந்து சேருவார் என்று கூறியுள்ளார்.