
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாட்டில் எவ்வளவு பிரச்சனை இருக்கு ? விலைவாசி ஏறிட்டு இருக்கு. சட்ட ஒழுங்கு… காரைக்குடியில் பாருங்க குண்டு வீசி இருக்காங்க, எங்க கட்சிக்காரங்க வீட்டில… அவங்க கட்சிக்காரங்க வீட்டிலையும் கூட குண்டு வீசி இருக்காங்க. இன்னைக்கு என்னன்னா… பெட்ரோல் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கிருச்சி.
கஞ்சா ஒழிக்கிறேன்னு சொல்லிட்டு கூட்டணி நடத்துறாரு. அப்போ சொன்னாரு கஞ்சா ஒழிக்கிறதுல நான் சர்வாதிகாரி ஆக மாறிடுவேன் என சொல்லுறாரு. சர்வாதிகாரி என்ற பேச்சே ஒரு கேலிக்கூத்து ஆயிடுச்சு. எல்லாத்தையும் சர்வாதிகாரி, சர்வாதிகாரி என்று சொல்லிட்டு இருக்காரு. இந்த ரெண்டு வருஷத்துல பாத்தீங்கன்னா….
அவரே இன்னைக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். எவ்வளவு எங்க ஆட்சியில புடிச்சோம்னு… ? புடிச்சோம்னு சொன்னா… நாட்டுல கஞ்சா, கிரயின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதை பொருட்கள் எல்லாம் நடமாடிட்டு தானே இருக்கு. ஒரு கள்ளச்சாராயம் சாப்பிட்டு 22 பேர் மேல சாகுறாங்க. செத்த பிறகு தான் இந்த கவர்மெண்ட் விழிக்குது.
அதுக்கு முன்னாடி விழித்திருந்தால் அந்த 22 பேரை காப்பாற்றி இருக்கலாம் இல்ல. அந்த 22 பேர் செத்து போயிட்டாங்க. செத்துப் போயிட்ட பிறகு… இவ்வளவு கள்ளச்சாராய ஊறல் அழித்தோம், இவ்வளவு அளவுக்கு கஞ்சா பிடிச்சோம், இவ்வளவு பேர் மேல குண்டர் சட்டம் போட்டோம்னா… இவ்வளவு செஞ்சுட்டு சர்வாதிகாரியா நான் மாறிடுவேன்னு சொல்லுறாரு… என்ன அர்த்தம் சர்வாதிகாரியா மாறி, முழுமையாக… zero லெவலுக்கு கொண்டுவர வேண்டியதுதானே ? சும்மா வெறும் வாய்சவடால்தான் என தெரிவித்தார்.