ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அங்கே ஒருத்தன் சொல்லுகிறார் அண்ணன் ஓபிஎஸ்யை பற்றி கேள்வி கேட்கிறார்…  அந்த பெரிய மனிதர் எங்களுடைய மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்லுகிறார்…  அவரை பற்றி எல்லாம் எங்க கிட்ட கேட்காதீங்க என்றார். அவர் ( ஓபிஎஸ் )  இல்லை என்று சொன்னால் ? இன்னைக்கு நீ துணை ஒருங்கிணைப்பாளரா ? புரட்சித்தலைவி அம்மாவுடைய மறைவுக்கு பிறகு பொதுக்குழுவில் நாங்கள் எல்லாம்  அமர்ந்திருக்கிறோம்.

அவர் அங்கே அம்மா வீட்டில் முன்னாடி நின்று கொண்டிருந்தவர். பொதுக்குழுவுக்கு வருவதற்கு தகுதியில்லாதவரை இந்த அளவுக்கு உயர்ந்த பதவியை பெற காரணம் அண்ணல் ஓபிஎஸ்.அவரை பார்த்து சொல்லுகிறார். நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், அவரோட பயணித்ததற்கு என்று சொல்கிறார். அவரோடு நீ பயணித்த காரணத்தினால் தான்  இன்றைக்கு எடப்பாடி பக்கம் அமர்ந்து இருக்கிறாய். எடப்பாடி பக்கம் அமர்ந்து  கொண்டு நீ பேசுகின்ற பேச்சு என்ன ? அவரை  பத்தி கேட்ட கேள்விக்கு நீ சொல்லுகின்ற பதில் என்ன ? அண்ணன் ஓபிஎஸ் அன்றைக்கு நினைத்து  இருந்தால்… அவரைப் பற்றி தெரிந்து இருக்கும்.

கேபி முனுசாமி பொருத்தவரையும் அம்மா அவர்கள் பலமுறை சொல்லி இருக்கிறார். என்னிடத்திலே பல முறை சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் ? அண்ணன் ஓபிஎஸ்-க்கு முழுமையாக தெரியும். அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியும். ஒரு முறை அம்மா அவர்கள் என்னை அழைத்து சொன்னார்கள். எப்பொழுது ? 2001லே 23 வருடங்களுக்கு முன்பே சொன்னார்.

முனுசாமி நடிகர்… அவரை நம்பி…  அவர் பின்னால் செல்ல கூடாது. அப்படி சென்றால் அவரை வைத்து கட்சி ஆரம்பிச்சிக்கோ என்று சொன்னார்கள். 2001ல் அந்த கருத்தை அம்மா சொன்னார்கள். 2004லே வலியுறுத்தி சொன்னார்கள். இதெல்லாம் அண்ணனுக்கு தெரியும். எப்படிப்பட்டவர் அவர் ? எப்படி நடிப்பார் ? எப்படி நடித்து காலை பிடிப்பார் ?  என்பதெல்லாம் அவருக்கு தெரியும் என தெரிவித்தார்.