
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, தொடக்க காலத்தில் ஐம்பெரும் தலைவர்கள்ல யாரு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தாங்களோ, அவர்களே இந்த கட்சியை ஒரு தீய சக்தி என்று ஒருவராக வெளியே போய்ட்டார். அப்போ இந்த கட்சி தமிழ்நாட்டில் எதுக்குங்க வேணும்…. மதியழகன் ஐயா இருந்தாங்க, சம்பத் ஐயா இருந்தாங்க…. நெடுசெழியன் ஐயா இருந்தாங்க…. எல்லாம் கிளம்பியாச்சு…. வேலையே வேண்டாம் என கிளம்பிட்டாங்க…. அதற்குப் பிறகு அங்கிருந்த முக்கியமான பட்டியலின சமுதாயத்தில் இருந்த சத்தியவாணி முத்து இருந்தாங்க.
அவங்களுக்கு என்னாச்சு சட்டப்பேரவையில் ? சட்டப்பேரவையில் ஒரு அமைச்சர் எந்திரிச்சு….. முதலமைச்சரை சட்டசபையில் கேள்வி கேக்குறாங்க…. கருணாநிதி அவர்கள் முதலமைச்சர். சத்தியவாணி முத்து எந்திரிச்சு கேள்வி கேட்குறாங்க…. கலைஞர் அவர்கள் பட்டியலின சகோதர – சலோதரிகளுக்கு பண்டே கொடுப்பதில்லை. அவரின் செயல்பாடுகளே சரியில்லை என சொன்னாரு. உடனடியாக சத்தியவாணி முத்து ஐயாவையும் கட்சியை விட்டு நீக்கியாச்சு…
இன்னைக்கு இவங்க சமூகநீதி என்ற போர்வையில் தமிழ்நாட்டில் சுத்திட்டு இருக்காங்க. பழைய கதை எல்லாம் எடுத்து படிச்சு பாத்தீங்கன்னா… எந்த அளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி என்பது நமக்கு தெரியும். இன்னைக்கு ஒரு குடும்பத்தினுடைய கன்ட்ரோல். தமிழ்நாடு முழுவதுமே 15 குடும்பத்தினுடைய கண்ட்ரோலில் இருக்கு. அதையெல்லாம் உடைத்து, தமிழகத்திற்கு முழுமையாக விடுதலை என்பதை பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் கொடுக்க முடியும்.
நாம் மட்டும்தான் முழுமையாக விடுதலை என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்து, நாம போற இடத்துல எல்லாம் யாத்திரையில் பேசிட்டே போறோம். பார்த்தீங்கன்னா…… தர்மபுரி எம்பி ஒருத்தர் இருக்காரு. ட்விட்டரில் எல்லாம் பயங்கரமா சவுண்ட் விடுவாரு….. அவருடைய தொகுதிக்கு போகும் போது சொல்லி இருக்கிறோம்…. தர்மபுரியில் இதற்கு முன்பு இடைத்தேர்தல் வந்த போது…..
பெரியார் அவர்கள் விடுதலை எழுதுறாங்க….. தர்மபுரி மக்களே….. திமுக என்கின்ற கலகக்காரர்களுக்கு ஓட்டு போட்டுறாதீங்க….. திமுக என்றாலே கலகம். அவனை ஓட்டு போட்டு மட்டும் ஜெயிக்க வச்சிராதீங்க…. அந்த தேர்தல்ல இப்ப இருக்கக்கூடிய தருமபுரி எம்.பியினுடைய தாத்தா வடிவேலு கவுண்டர் காங்கிரசில் நின்னு ஜெயிக்கிறார்.
திமுககாரனை பெரியாரே தோற்கடித்து விட்டார். ஆனால் இன்னைக்கு அவர் பையன் பெரியாருடைய புகழைப் பாடிக்கொண்டு தர்மபுரியில் MPஆக சுத்திட்டு இருக்காங்க… தமிழ்நாடு முழுவதும் சரித்திரத்தை எடுத்து படிசீங்கன்னா….. மிக மோசமாக…. மிக கேவலமாக….திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி பெரியார் அவர்களே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். இது எல்லாம் இப்போது மக்களுக்கு தெரிய ஆரம்பிக்கிறது என தெரிவித்தார்.