
பல்கேரிய நாட்டின் தீர்க்கதரிசி பாபா வங்கா. இவர் பல்கேரிய நாட்டின் மாயவாதி ஆவார். சிறுவயதிலிருந்தே பார்வையற்ற பாபா வங்கா எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்க கூடியவர். அவர் கூறிய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளது. பாபா வங்கா 2025 ஆம் ஆண்டு எவ்வாறு அமையப்போகிறது என்னென்ன நிகழ்வுகள் நடக்க உள்ளது என்பதை முன்கூட்டியே கணித்துள்ளார். அடுத்து 2025 பிறப்பதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் 2025-ல் பாபா வங்காவின் கணிப்புகளை பார்க்கலாம். 2025 இலிருந்து 5079 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதுமாக அழிந்துவிடும் என பாபா வங்கா கனித்துள்ளார்.
2025ல் பாபா வங்கா கூறிய கணிப்புகள் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. 2025-ல் பொருத்தவரை மிகப்பெரிய தாக்குதல்கள், கவலை கொள்ளக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் என கனித்துள்ளார். 2025 இல் இருந்து உலகம் அழியத் தொடங்கும் மனித குலத்திற்கு பேராபத்து ஆரம்பமாகும் என கணித்துள்ளார். மேலும் ஐரோப்பிய கண்டத்திற்கு பேராபத்து காத்திருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அழிவுக்கு பின்னர் மனிதர்கள் வீனஸ் கிரகத்தில் உணவு வளங்களை தேடி செல்வர்.
மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும் எனவும் கூறியுள்ளார். இதன் பின்னர் 2033 ஆம் ஆண்டு மிகப்பெரிய பனிக்கட்டி ஒன்று உருகும் இதனால் கடல் மட்டம் அதிகரித்து சுனாமி போன்ற பெரிய அலைகள் உருவாகி மனிதர்களுக்கு அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2130 வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு, 2170-ல் பருவநிலை மாற்றம் புவி அழிவதற்கு வழிவகுக்கும், 3005இல் பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே மிகப் பெரிய அளவில் போர் உருவாகும்.3097 இல் உலகில் இருந்து மனித உயிர்கள் பிரியும். கடைசியாக 5079 இல் உலகம் முழுமையாக அழிந்து மனிதகுலமே இல்லாமல் போய்விடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.