
ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதில் பாதரை டாஸ்மாக் மதுபான கடைக்கு 4 பேர் ஒன்றாக வந்துள்ளனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள சண்டையில் முன்னா,துபாஸ் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஜன் லகுரி, மான்சிங் கக்ராய், தசரத படிங் ஆகிய மூன்று பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் நூற் ஆலையில் வேலை செய்து வந்த வட மாநில இளைஞர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.