
செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு அணி திரட்டுவதற்கான ஆயத்தங்களில் எல்லா கட்சிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பது ”இந்தியா” தான். இந்தியன் நேஷனல் டெவெலப்மென்டல் இன்க்ளூசிவ் அலையன்ஸ். இன்க்ளூசிவ் என்றால் ? எல்லோரும் ஒருங்கிணைந்த… ஒரு வெறுப்பு அரசியலுக்கு இடம் தராத ஒரு கூட்டணியை இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் பங்கேற்கின்ற அணி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறது.
இந்த இந்தியா என்ற சொல்லுகின்ற போது இந்தியாவுடைய தற்காலிக ”பிரதமர்”. அவர் இனிமேல் பிரதமராக முடியாது. எரிச்சல் அடைகிறார்கள். இந்தியா என்ற பெயரே அவர்களை ஆத்திரமூட்டுகிறது. பாரத் மாதா கி ஜே என்று காட்டுக் கூச்சல் போடுகின்ற கூட்டம். இந்தியா என்று சொல்லுகின்ற போது இன்றைக்கு எரிச்சல் அடைகிறார்கள். அப்படி என்றால் ? நாஞ்சில் சம்பத் கேட்கின்றேன் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இருக்கக் கூடாதா ?
இந்தியன் பேங்க் இருக்கக் கூடாதா ? இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் இருக்கக் கூடாதா ? இந்தியன் ஏர்லைன்ஸ் இருக்கக் கூடாதா ? இந்தியன் ரயில்வேஸ் இருக்கக் கூடாதா ? ”இந்தியா” என்று ஒரு அலையன்ஸ்சுக்கு பெயர் வைத்தாலே அதிகாரத்தில் இருக்கின்றவர்களின் ஆறக் கால்கள் ஆடுகின்றது. ஆகவே ஒரு வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து…
எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முதல் கட்டத்தில் இன்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் தேவை தமிழ்நாட்டோடு முடிந்துவிடவில்லை. அது இந்தியாவிற்கும் தேவைப்படுகிறது என்பதை முதலமைச்சர் இன்றைக்கு தனது செயல் மூலம் நிரூபித்திருக்கிறார் என தெரிவித்தார்.