
தமிழ் சினிமாவில் ‘கிரீடம்’ என்ற படத்தில் ‘கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து நெட்டிசன்கள் அண்மையில் நிறைய மீம்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தப் பாடலில் அப்பா ராஜ்கிரன், தனது மகனை நினைத்து பெருமை ப்படுவார். அந்த வகையில் இந்த மீம்மை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை காவல்துறையினர் தங்களது எக்ஸ் வலைப்பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர்.
அதில் அனைத்து கோவை மக்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி, ஹெல்மெட் அணிகின்றனர். அதனை நினைத்து கோவை போக்குவரத்து காவல்துறையினர் பெருமைப்படுவதாக அவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். சமீப காலமாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மீம்களை காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் பகிர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
When All Coimbatore Peoples Following Traffic Rules&Wear Helmet
~ City Police be Like
COIMBATORE CITY POLICE #coimbatore #coimbatorecitypolice #traffic #beawarebesafe #bealert #trafficnews #followtherules #wearhelmet #wearseatbelt @tnpoliceoffl@CMOTamilnadu @CollectorCbe pic.twitter.com/hpECcgvVEB
— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) January 18, 2025