தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டத்தில் உள்ள சூர்யாபேட் என்ற சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் 2 பேர் லேசான காயங்கள் ஏற்பட்டது. இவர்கள் 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார் ஓட்டிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அவர் மது போதையில் இருந்ததும், இதனால் காரை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.