
அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்று நடத்தியது. அந்த ஆய்வில் இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வந்தால், மக்களின் வாழ்நாள் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது 2011-ம் ஏற்பட்ட காற்று மாசுபாடை காட்டிலும், 2022-ம் ஆண்டு காற்று மாசு 19. 3% குறைந்துள்ளது. இப்படியே இந்த காற்று மாசு நிலைத்திருந்தால், இந்தியாவில் வாழ்பவர்கள் 3.4 வருட வாழ்நாளை இழக்க கூடும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தான் ஒட்டுமொத்த மாசுபாடு கொண்ட நாடாக இருக்கிறது. அங்கு வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசு சுமையை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில் மிகவும் காற்று மாசுபட்ட பகுதியில் வடபகுதி ஆகும். இங்கு 50 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2022-ம் ஆண்டு காற்று மாசு அளவு 17.2 % குறைந்தது. இருப்பினும் இந்த மாசு தொடர்ந்து நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்ந்தால் ஆயுள் காலம் 1.2 ஆண்டு அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. வடப் பகுதியைத் தாண்டி மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்கிறது. இங்கு சராசரியாக 29 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தங்களது ஆயுசு காலத்தில் 2.9% வரை இழக்க நேரிடும். இதேபோன்று தெற்கு ஆசியாவில் கடந்த 20 ஆண்டுகளில் காசு மாசுபாடு 18% குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.