
சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. முதல்வர் மு.க ஸ்டாலின் கூட உதயநிதியின் பேச்சிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு, பிரதமர் மோடி மற்றும் பாஜகவினருக்கு விளக்கம் அளித்த நிலையில், தொடர்ந்து அது குறித்தான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.
உதயநிதி ஸ்டாலினும் பேசியதில் பின்வாங்காமல், அண்ணா – அம்பேத்கர் – பெரியார் பேசாததையா நான் பேசி விட்டேன். சனாதன விவகாரத்தில் ஆட்சியே போனாலும் கவலை இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் கருத்து குறித்து தெரிவித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்,
தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம், இந்தியாவுக்கு எரி நட்சத்திரமாக உதயநிதி விளங்குகிறார். உதயநிதியின் அரசியல் வீச்சு கலைஞர், ஸ்டாலினை விட உயர்ந்து நிற்கப் போகிறது என தெரிவித்தார்.