
தனது விளம்பரம் மூலம் வரக்கூடிய வருமானத்தை கிரியேட்டர்களுடன் பகிர உள்ளதாக ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்கன் டாலர் கொடுத்து வாங்கினார். இது நம் அனைவரும் அறிந்ததே. அந்நிறுவனத்தை அவர் வாங்கியதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் ப்ளூ டிக் இனி வைத்திருக்க வேண்டுமானால்,
அதற்கான சப்ஸ்கிரைப் தொகையை பயனாளர்கள் செலுத்த வேண்டியதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்துக்கு பலரும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் அனைவரது வெறுப்பையும் மாற்றி அமைப்பதற்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி,
ட்விட்டரில் சப்ஸ்கிரைப் செய்து ப்ளூ டிக் பெரும் அனைவருக்கும் twitterஇல் விளம்பரம் மூலம் வரும் வருமானத்தை கிரியேட்டர்களுடன் ஷேர் செய்ய இருப்பதாக தெரிவித்தார். தற்போது சொன்ன சொல்லை காப்பாற்றும் விதமாக, அதை எலான் மஸ்க் செய்தும் காட்டியுள்ளார். அதன்படி,
இன்னும் 72 மணி நேரத்தில் ட்விட்டரில் ப்ளூ டிக் சப்ஸ்க்ரிப்ஷன் வாங்கிய க்ரியேட்டர்களுடன் ட்விட்டர் தனது விளம்பரம் மூலம் வரும் வருமானத்தை பகிரவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களை twitter கிரியேட்டர்களுக்கு அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து பலரும் தங்களுக்கு twitter முதன்முதலாக அளித்துள்ள தொகையை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.
🚨BREAKING: Twitter Monetization For Creators Is REAL💰
I just received my first ad revenue payment from Twitter.
1st check = $10K (!!!)
I would typically never share personal financial info but creators need to know that @elonmusk means BUSINESS supporting the creator economy pic.twitter.com/JliTBR2LkG
— Benny Johnson (@bennyjohnson) July 13, 2023