சென்னையை பரபரப்புக்குள்ளாக்கிய ஈசிஆர் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் அதிமுகவினர் என்றும் திமுக கொடியை பயன்படுத்தி புதிய செயல்களை திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு இளம் பெண்கள், இரண்டு இளைஞர்கள் என ஆறு பேர் சென்ற காரை நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் காரில் துரத்தி சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் சம்பவத்தில் தொடர்ப்புடைய எஸ்யூவி கார்கள் பல கைகள் மாறியதால் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். இதனை அடுத்து தாம்பரத்தில் ஒரு காரும், பொத்தேரியில் ஒரு காரையும் காவல்துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தார்கள்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்களின் திமுக கொடி இருந்ததால் இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்டஎதிர்  கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ,”இந்த சம்பவத்தில்  தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது .இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு அதிமுகவை சேர்ந்தவர். அவர் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு கார் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளன் சகோதரன் மகனுக்கு சொந்தமானது.. அதிமுக செய்த ஒவ்வொரு குற்றத்தையும் திமுக மீது பழி போட்டுக் கொண்டிருக்கிறது. யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.