செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி,  தாம்பரம் மாநகராட்சி அவலத்தை கண்டித்து ADMK சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இதில் பொதுமக்களே கலந்து கொண்டு நல்லா சொல்லுங்க… நல்லா சொல்லுங்கன்னு சொல்றாங்க. ஏற்கனவே சொன்னதெல்லாம் எதுவுமே செய்யல.  தாம்பரம் மாநகராட்சிக்கு மட்டும் ரோடு சரியில்ல… லைட் இல்ல…. நல்ல நீரோட கழிவு நீரு கலந்து வருது.

அண்ணன் எடப்பாடி அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது 25 கோடி ஏரியை சீரமைக்க கொடுத்தார். அதையே சரியா செய்யல.  அண்ணா திமுக ஆட்சியில் வந்த அம்மா உணவகம் தாம்பரம் மாநகராட்சியில் இவ்வளவு கேடுகெட்ட சூழ்நிலையில் இருக்கு பாருங்க. இதெல்லாம் ஏழை மக்கள் பயன் பெறக்கூடிய திட்டங்கள் எல்லாம் வயிற்றில் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை எல்லாம் கண்டிக்க வேண்டும் என்று கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக  எங்களுடைய அண்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் தெளிவாக சொல்லி இருக்கிறார். யார் என்ன கருத்தை சொன்னாலும்,  அது அவரவர் தனிப்பட்ட கருத்து. அது எங்களுடைய கருத்தாக நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது அப்படின்னு அண்ணன் தெளிவுபடுத்தி விட்டார்.

எங்களுடைய கட்சியின் தலைவர், அவர் சொல்வது தானே சட்டம். பாஜக விவகாரத்தில் எங்களுடைய தலைவர் என்ன சொல்றாரு, அவர் எடுக்கிற முடிவுதான். பாஜகவோடு கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை. அது எங்க கருத்தல்ல. அண்ணா திமுக கருத்தல்ல. அண்ணன் எடப்பாடியார்  அவர்கள் தெளிவாக சொல்லிட்டாரு. பாஜக கூட்டணி முறிவு தொண்டர்களின் விருப்பம்.  தொண்டர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு தான் இந்த முடிவு.  யாராவது சொன்னால் தனிப்பட்ட கருத்து. அவர் சொன்னதற்கு பிறகு அதுதான் அண்ணா திமுக தொண்டர்களின் வேத வாக்கு என தெரிவித்தார்.