ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டாம். அதற்கு பதிலாக அவர்களின் வேலை வாய்ப்புக்கான திறன்களை வளர்க்க உதவுவதோடு, அவர்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பண உறுதி ஆவணம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது அவர்களுக்கு ரூ.12000, ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என்று 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான நெறிமுறைகளை https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_90_ms_2024.pdf மற்றும் https://cms.tn.gov.in/cms_migrated/document/GO/adtw_t_5_ms_2025.pdf என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது பணம் உறுதி ஆவணம் வழங்க உயர்திறன் ஊக்கத்திட்டத்தினை  2024-25 ஆம் ஆண்டு செயல்படுத்த விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணைய வழியில் இன்று முதல் தொடங்கி  அடுத்த மாதம் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட விபரங்களை மாணவர்களுக்கு தெரிவித்து அவர்களை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றது என்று கூறப்பட்டுள்ளது.