தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை அரசு இரு மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 2000 ரூபாயாகவும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 6000 ரூபாய் ஆகவும் இயற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‌ கல்வி உதவித்தொகை 8000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவி தொகையானது 6000 ரூபாயிலிருந்து 12,000 ஆனது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தொழில் கல்லூரிகளிலும் பட்ட மேல் படிப்புகளிலும் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஆண்டு கல்வித் தொகை 14,000 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.