கோவையில் உள்ள மதுக்கரை என்ற பகுதியில் ரயில் தண்டவாளத்தை யானைகள் பாதுகாப்பாக கடக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமரா திட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 பிப்ரவரி முதல் தற்போது வரை மொத்தம் 2500 முறை யானைகள் பாதுகாப்பாக கடந்துள்ளன.

12 டவர்களில் பொருத்தப்பட்ட 24 தெர்மல் ஆப்டிகல் கேமரா மூலம் 5011 முறை அலர்ட் பெறப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக இது போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.