ட்விட்டரில் நாள் ஒன்றுக்கு காணக்கூடிய பதிவுகளுக்கான எண்ணிக்கை அளவை வரையறை செய்து  எலன் மஸ்க் ட்விட் செய்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களை அமுல்படுத்துவதும், நீக்குவதுமென தொடர்ச்சியாக ட்விட்டர் பயனாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டே வந்தார். அதன்படி, சில நாட்களுக்கு முன்பாக ப்ளூ டிக் வாங்க மாத சந்தா செலுத்த வேண்டும் என்ற அவர் நடவடிக்கைக்கு எதிராக  பலரும் கேலி செய்தும், நேரடியாக தங்களது அதிருப்த்தியை  ட்விட்டரில் பதிவிட்டும் வந்தனர்.

 இந்நிலையில் ட்விட்டரில் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் ஒரு நாளுக்கு 6000 பதிவுகள் வரை காணலாம் எனவும், சரிபார்ப்பு செய்யப்படாத கணக்குகள் ஒரு நாளுக்கு 600 பதிவுகள் வரை காணலாம் எனவும், புதிதாக ட்விட்டர் வந்து சரிபார்ப்பு செய்யப்படாமல் இருக்கும் கணக்குகள் ஒருநாளுக்கு 300 பதிவுகள் மட்டுமே பார்க்க இயலும் என தெரிவித்துள்ளார்.

இது தற்காலிகமான முடிவு எனவும், தகவல்களை திருடுதல் மற்றும் அவற்றை கையாளுதல் உள்ளிட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுவதோடு,  சமூக வலைதளங்கள் மீது இருக்கும் அதீத  மோகத்திலிருந்து மக்கள் விடுபட இது உதவும். இதன் மூலமாக நான் இந்த உலகிற்கு நன்மை தான் செய்துள்ளேன்  என எலன் மஸ்க்  தெரிவித்துள்ளார்.