
அபராத வட்டி என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் அட்டவணையில் ஒப்புக் கொள்ளபட்ட படி சரியான நேரத்தில் நம்முடைய கடன் EMI-களை செலுத்தவிட்டால் கடன் நிறுவனம் விதிக்கும் அபராதம் ஆகும். நம்முடைய EMI தொகையை மாதந்தோறும் சரியாக செலுத்தினாலும், நிலுவைத் தேதிக்குள் செலுத்தாவிட்டால் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதற்கான அபராத வட்டியை வசூலிப்பார்கள்.
ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவுகளின்படி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அபராத வட்டி வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.