
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாம்ராஜ்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி தனது வேலையை முடித்துவிட்டு இரவு சுங்குவார்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது மொளச்சூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்தனர்.
இது குறித்து சாம்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரது செல்போன் லொகேஷனை வைத்து அஜய், சேட்டு, கௌதம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனையும் கைப்பற்றினர்.