இந்திய ரயில்வே துறையில் 8,113 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Chief Commercial cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant cum Typist, Senior Clerk cum Typist ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான இளங்கலை பட்டதாரிகள் அக்டோபர் 13, 2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு 18 முதல் 33 ஆண்டுகளாக இருக்க வேண்டும், மேலும் தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத சம்பளம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை பெறுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற வேண்டும். தேர்வில் தகுதியானவர்களுக்கு தட்டச்சு திறன், கணினி வழியிலான புணிப்புரியும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது சலுகை மற்றும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். தேர்வுக்கான கேள்விகள் ஆங்கிலம், தமிழ், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடைபெறும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 13, 2024 ஆகும். தகுதியானவர்கள் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.