
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஏடிகே. இவர் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் இந்நிகழ்ச்சி வாயிலாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஏடிகே தன் சமூகவலைதளத்தில் பிரபல இளம் இசையமைப்பாளருடன் இணைந்து பணிபுரிய ஆசைப்படுவதாக பதிவுசெய்துள்ளார்.
அந்த பதிவில், கேம் முடிந்து விட்டது. கபடி வீடியோ வாழ்க்கையில் வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இளம் இசை அமைப்பாளர் அனிருத் உடன் தான் இணைந்து பணியாற்ற ஆசை” என தெரிவித்துள் உளார். ஆகவே அவரது கோரிக்கையை ஏற்று அனிருத் இசை அமைக்கும் படத்தில் வாய்ப்பு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.