
தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் “வாத்தி”. பிரபல தயாரிப்பாளர் நாகவம்சி தயாரித்து வரும் இந்த படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தெலுங்கில் சார் எனவும் தமிழில் வாத்தி எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். அண்மையில் வெளியான இந்த படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் 2-வது பாடலான “நாடோடி மன்னன்” வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் நாடோடி மன்னன் பாடல் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1 லட்சம் லைக்குகளை பெற்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதை ஜி.வி.பிரகாஷ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்து உள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
100K likes and 4 million views counting! ❤️🔥#NaadodiMannan is taking over the charts and stealing hearts 🤩
Keep streaming 📻
▶️ https://t.co/RBWu0qH4zO🎤 @anthonydaasan
✒️#Yugabharathi #Vaathi @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @vamsi84 @SitharaEnts pic.twitter.com/HlKDimXSVF— G.V.Prakash Kumar (@gvprakash) January 20, 2023