ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்டவற்றின் பைக்டாக்சி சேவையானது விதிமுறைகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அங்கு பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பைக்கில் பயணிகளை ஏற்றி செல்வோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதை மீறி யாரும் செயல்பட்டால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்துசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. பைக் டாக்சி சேவை வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டத்தை மீறும் செயல் என்பதால், அக்ரிகேட்டருக்கு ரூபாய்.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் 3 மாதங்களுக்கு ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.