
குறிப்பிட்ட சிறப்புமிக்க ரயில்கள் வரக்கூடிய வழியில், வேறு ரயில்கள் வந்தால் அதனை நிறுத்தி இந்த முக்கிய ரயில்களுக்கு வழி விடப்படும். சிறப்புவாய்ந்த நோக்கங்களுக்காக இந்த ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்திய ரயில்வேயின் முன்னுரிமை கொண்ட ரயில்கள் எது?, அதன் சிறப்பு என்ன என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ARME ரயில்கள்
ARME என்பது அவசர காலத்தில் (அ) விபத்துக்கு பின் இயக்கப்படும் அதிக முன்னுரிமை கொண்ட ரயில்கள் ஆகும். இதில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படும். ARME ரயில் போகும் பாதையில் மற்ற ரயில்கள் வந்தால், அவை நிறுத்திவைக்கப்படும். இதன் காரணமாக அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று நிவாரண பொருட்களை நேரத்துக்கு வழங்க முடியும்.
ஜனாதிபதி (அ) VVIP ரயில்கள்
இந்த ரயில்களானது இந்திய ஜனாதிபதி (அ) சில சிறப்பு விவிஐபிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்வதற்காக இயக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ராஜதானி ரயில்களை காட்டிலும் இது மிகவும் முக்கியமானதாகும். இந்த ரயில்களுக்காக பிற ரயில்கள் நிறுத்திவைக்கப்படும்.
புறநகர் ரயில்கள்
உள்ளூர் ரயில்கள் (அ) மற்ற ரயில்களுடன் ஒப்பிடுகையில் இது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். எனினும் பீக் ஹவர்ஸ் (அ) கூட்ட நெரிசல் நேரங்களில் மற்ற ரயில்கள் புறநகர் ரயில்களுக்காக நிறுத்தி வைக்கப்படும். மக்களின் தேவையை கருதி இந்திய ரயில்வே இந்த ரயிலை இயக்குகிறது.