EPFO அமைப்பின் கீழ் உள்ள பணியாளர்கள் அனைவரும் UAN என்ற நிரந்தர யுனிவர்சல் கணக்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இ பி எஃப் அமைப்பின் கீழ் இணைந்துள்ள பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகல விலைப்பட்டியல் 12 சதவீதம் ஒரு நிலையான வைப்புத் தொகையாக EPFO கணக்கில் செலுத்தப்பட வேண்டும். தற்போது UAN என்னை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

முதலில் EPF உறுப்பினர் அதிகாரபூர்வ போர்ட்டலுக்கு சென்று “Activate UAN” அல்லது UAN செயல்படுத்தல் என்பதைக் கிளிக் செய்து UAN நம்பர், உறுப்பினர் ஐடி, ஆதார் அல்லது பான் எண் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகிய விவரங்களை உள்ளீட்டு “அங்கீகார பின்னைப் பெறு” என்பதைக் கிளிக் செய்யவும்.

பிறகு உங்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ள OTP ஐ சரிபார்த்து யுஏஎன் ஆக்டிவேட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

அதன் பிறகு UAN எண் ஆக்டிவேட் ஆகிவிடும். அதே போல https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface/noauth/citizenRegistration/viewRegistraton என்கிற போர்ட்டலின் மூலமாக UAN – ஐ உருவாக்கலாம்.