
EPFO பயனாளர்கள் தங்கள் KYC இல் இருக்கும் தவறுகளை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்யலாம் என மத்திய தொழில்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி பிஎப் பயனாளர் தனது பெயர், பாலினம், ஆதார் எண், பெற்றோரின் பெயர் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இனி ஆன்லைனில் எளிதாக திருத்திக் கொள்ள முடியும். ஆனால் தக்க சான்றுகளை பதிவேற்றம் செய்வது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.