
பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுசாம்பியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ரூ.612 கோடி மதிப்பிலான மொத்தம் 117 வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார்.
அதன்பின் அவர் பேசியதாவது, இந்தியாவில் பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் கடந்த 3 வருடங்களாக மக்கள் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதாகவும், பாகிஸ்தானில் மக்கள் 2 வேளை உணவுக்காக போராடி வருவதாகவும் கூறியுள்ளார். அண்மையில் ஒரு விழாவில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியா செல்வ செழிப்பில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. வேறுபாடின்றி வளர்ச்சி திட்ட பலன்களை அனைத்து மக்களும் பெறுகின்றனர் எனக் கூறினார்.