
திருச்சியில் நேற்று செய்தியாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என எல்லா இடங்களிலும் கொலைகள் நடக்கின்றது. இதனால் எல்லாரும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், போக்குவரத்து தொழிலாளர்களை போராட வைக்கின்றனர். ஆனால் சிறந்த ஆட்சி தருகிறோம் என்று கூறுகிறார்கள்.
இவர்கள் தமிழர்களின் அடையாளங்களை மறைத்து வைத்துவிட்டு, பேருந்து நிலையம், நூலகம் என அழைத்து இடங்களிலும் கருணாநிதியின் பெயரில் சூட்டப்படுகிறது. தேவையற்ற எல்லா இடத்திலும் காங்கிரசும், திமுகவும் முதலில் கையெழுத்து போட்டிருக்கும். அமலாக்குத்துறை சோதனைக்கு பயந்து போன திமுக, அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டன தீர்மானங்களை நிறைவேற்ற வில்லை. விஜய் என்னுடைய தம்பி, திமுக என்னுடைய எதிரி. ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறினார்.