
உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் சிறையில் நடைபெற்ற ராம்லீலா நாடகம், மைனா திரைப்படம் போல் ஒரு பரபரப்பு சம்பவத்தை உருவாக்கியது. இந்த நாடகத்தின் போது, ஆயுள் தண்டனை கைதி உட்பட இருவர் சிறையிலிருந்து தப்பித்தனர். அவர்கள் அப்போது நிகழ்ச்சியில் அனுமனின் வானர சேனையாக வேடமிட்டிருந்தனர்.
நவராத்திரி விழாவின் மகோற்பாகத்தில், சிறை அதிகாரிகளின் ஏற்பாட்டில் கைதிகளை வைத்து நாடகம் அரங்கேறியது. நாடகத்தில், அனுமனின் வானரங்கள் போல வேடமிட்ட கைதிகள், ‘சீதையை தேடிச் செல்வதாக’ கூறி, சிறையிலிருந்து ஓடியுள்ளனர். நாடகத்திற்குப் பிறகு, கைதிகளின் எண்ணிக்கையை வைத்து பார்த்த போது, இரண்டு கைதிகள் தப்பி சென்றது தெரிந்தது.
இதனால் சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு விசாரணை நடத்தியதால், அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, அங்கு உள்ள சிறை காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.