
செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பொங்கல் திருநாளை ஒட்டி ஜல்லிக்கட்டு, அதே மாதிரி சேவல் சண்டை. இந்தப் பக்கம் எல்லாம் சேவல் கட்டு பேமஸ். பல விளையாட்டுப் போட்டிகள், ரேக்ளா ரேஸ் இதெல்லாம் நடக்கும். அரசாங்கம் பல இடங்களிலே இதற்கான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டிலே கோயில்களில் வாடிவாசலில் தான் காளைகள் அவிழ்த்து விடப்பட வேண்டும், அதுதான் ஜல்லிக்கட்டு. இப்பொழுது ஸ்டேடியத்தில் என்ன ? வாடிவாசல இருக்கிறது… காளைகளை அவிழ்த்து விடுவதற்கு…. பாரம்பரியமாக… ஒரு பண்பாட்டு ரீதியான வழிபாட்டிலே, இன்றைக்கு அரசாங்கம் வெவ்வேறு விதமான விதிமுறைகளைச் சொல்லி, இதை ஒரு கட்சி நிகழ்ச்சி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கும் நம்முடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவர் தினம்… திருவள்ளுவர் தினம் என்பது அவர்கள் வள்ளுவர் 2000 வருடம் தான்…. ஏசுநாதருக்கு பிறகுதான்…. என்பது போன்று கொண்டு வருகிறார்கள். உண்மையிலேயே வள்ளுவர் தினம் என்பது வைகாசி மாதம். அந்த அனுஷ நட்சத்திரத்தில் இருந்து வள்ளுவர் தினம் கொண்டாடப்படும்.
ஆனால் இவர்கள் தொடர்ந்து திருவள்ளுவர் அவருடைய நெற்றியில் திருநீரில்லாமல், அவருடைய உருவத்தை எல்லாம் மாற்றி அமைத்து… இன்றைக்கு மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதையெல்லாம் முறியடிக்க வேண்டிய காலகட்டத்திலே தமிழர்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.