கோவை காந்திபார்க் இடையர் வீதி பகுதியில் மது போதையில் இருந்த ஒருவர், சாலையில் செல்பவர்களை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், மதுபோதையில் இருந்த போதை ஆசாமியை அங்கிருந்து செல்ல அறிவுறுத்தினர். அப்போது அவர் காவல்துறையினரை ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல், வாடா, போடா என்று தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றி, லத்தியால் அடித்தனர். பின்பு காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.