தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, வேற எந்த  கட்சிகளுக்கும் இந்த அளவுக்கு உழைப்பு இல்லை. பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை எல்லா கட்சிகளும் தமிழகத்தில் நம்மை எதிர்த்து நிற்கின்றார்கள்.  எல்லா கட்சியினுடைய  சித்தாந்தத்துக்கும் நேர் எதிர் சித்தாந்ததில் நாம் இருக்கிறோம். எல்லா கட்சிகளுமே ஒரு குடும்பத்தை நோக்கி போக ஆரம்பிச்சுட்டு.

ஒரு தலைவருடைய கண்ணசைவிற்கு கட்சி காத்து இருக்கின்றது. எல்லா கட்சிகளும் வந்து பாத்தீங்கன்னா…..  ஒரு கொள்கை பிடிப்பு இல்லாத ஒரு கட்சிகளாக மாறிக்கொண்டிருக்கும்போது,  பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் தேசம் முதன்மையானது. நாடு முதன்மையானது, மக்கள் முதன்மையானவர்கள்.  அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்முடைய ஆட்சியும்,  சித்தாந்தமும் இருப்பதினால் எதிர்ப்பு என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்ந்து இருக்கத்தான் ஐயா போகிறது.

நாம எம்.பி ஜெயித்தாலும் நமக்கு எதிர்ப்பு இருக்கத்தான் போகிறது. நாம் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்ப்பு இருக்கத்தான் போகிறது. ஏனென்றால் நாம் எதிர்ப்பது ஒருவரை இருவரை அல்ல.   70 ஆண்டுகளாக கட்டமைத்த பிம்பத்தை எதிர்த்து கொண்டு இருக்கின்றோம்… எழுத்தாளர்கள், திரைப்பட வசனம் எழுதுபவர்கள், சில டைரக்டர்ஸ், பாட்டு எழுதுறவங்க, செய்தி துறையில் எழுதக்கூடிய ஆசிரியர்கள், எடிட்டர், செய்தித் துறையில் நியூஸ் படிக்கிறவங்க, வார பத்திரிகையின் ஆசிரியர்கள், எத்தனை பேரை எதிர்கின்றோம் என தெரிவித்தார்.