
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, எழுத்தாளர்கள், திரைப்பட வசனம் எழுதுபவர்கள், சில டைரக்டர்ஸ், பாட்டு எழுதுறவங்க, செய்தி துறையில் எழுதக்கூடிய ஆசிரியர்கள், எடிட்டர், செய்தித் துறையில் நியூஸ் படிக்கிறவங்க, வார பத்திரிகையின் ஆசிரியர்கள், எத்தனை பேரை எதிர்கின்றோம் பாருங்க….
அதெல்லாம் தாண்டி அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய பல கட்சிகள் கம்யூனிஸ்டுகள், ஒரு பக்கத்தில் ஜாதி கட்சிகள், திராவிட முன்னேற்றக் கழகம் என நமக்கு மட்டும்தான் எதிர்ப்பு என்பது 360 டிகிரி…. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஒரு கட்சிக்கு 360 டிகிரி எதிர்ப்பு இருக்காது. அது நமக்கு இருக்கு. அந்த எதிர்ப்புகளை நீச்சல் போட பழகிவிட்டோம். அந்த எதிர்ப்புல நாம நீச்சல் போட ஆரம்பித்துவிட்டோம். இவ்வளவு காலமாக உழைக்கின்ற உழைப்புக்கு ஒரு அர்த்தம் தேர்தல் வெற்றி. தேர்தல் வெற்றி என்பது ஒரு அர்த்தம்.
அது நமக்கு வேணும். அது 2024இல் உங்களுக்கு பக்கத்தில் வந்துடுச்சு. திமுகவினுடைய பொய்களை எல்லாம் உடைக்க ஆரம்பித்துவிட்டோம், மக்கள் உண்மையை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. சமூக நீதி பற்றி பேசுகிறார்கள். கடைசி ஆயுதம் சமூகநீதியை துக்கிட்டு வருவாங்க. எல்லாம் முடிஞ்சு போச்சு. சென்னை வெள்ளத்தில் மக்கள் கோவமா இருக்குறாங்க….. இன்வெஸ்டர் மீட்டில் பணம் வரல. நினைச்ச மாதிரி எதுவும் நடக்கல. அப்ப நாங்க சமூக நீதின்னு சொல்லுவாங்க என தெரிவித்தார்.