
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை வீ.சி.க தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து சந்தித்துள்ளார். ஆட்சியில் இட ஒதுக்கீடு குறித்து அவர் பேசியது தற்போது சர்ச்சை கிளப்பிய நிலையில். இச்சந்திப்பு நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பா.ஜ.க கட்சியின் உறுப்பினர் தமிழிசை சௌந்தரராஜன் திருமாவளவன் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதுவிலக்கு மாநாடு நடத்தப் போவதாகவும் இதனால் கூட்டணியில் பிரிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கூறிய திருமாவளவன்
முதலமைச்சரை சந்தித்ததும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கைக்கு சம்மதிக்காதவர்கள் மதுவிலக்கு மட்டும் சம்மதம் தெரிவிப்பார்களா? அரசே வருமானத்திற்காக மதுக்கடைகளை திறந்துள்ளது. முதலமைச்சரே தனது கட்சியின் கீழ் இயங்கும் மது உற்பத்தி ஆலைகளை மூட வேண்டும் .அதன் பிறகு மது ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டும். மது ஒழிப்பு மாநாடு என்னும் நாடகம் மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.