
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகள் பற்றி பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறும் போது சினிமாவை விட வெளியில்தான் பாதுகாப்பு அற்ற சூழ்நிலை நிலவுகிறது. இது போன்ற பிரச்சனைகளை நான் 8 வயது இருக்கு போதே சந்தித்து வருகிறேன்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக திரைத்துறையில் அப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கவில்லை. அதே சமயம் மற்றவர்கள் பாலியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை என்று கூற முடியாது. இந்தப் பிரச்சனைகளை நான் சந்தித்தால் அதை எப்படி மற்றவர்களிடம் சொல் வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. மேலும் பாலியல் வன்முறைகளை கண்காணிக்க சிறந்த கட்டமைப்பு வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என கூறியுள்ளார் .